உள்நாடு

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து.

(UTV | கொழும்பு) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த போது இன்று அதிகாலை 3.45 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வாகனம் முழுமையாக சேதமடைந்தபோதும் தமக்கோ வாகனத்தில் பயணித்த ஏனையோருக்கோ எந்த பாதிப்பும் இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

மரண தண்டனை இரத்து: சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது – உயர் நீதிமன்றம்

யூரியா உர இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை அமைச்சரவைக்கு