வகைப்படுத்தப்படாத

குவாத்தமாலா கோர விபத்து-துக்க தினம் பிரகடனம்.

(UTV|GUATAMALE) குவாத்தமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த பாரவூர்தி வேக கட்டுப்பாட்டினை இழந்து  பொதுமக்கள் மீது மோதுண்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த நாட்டு ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ், குறித்த சம்பவம் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், அவர்களது குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தத்தை அடுத்து குவாத்தமாலாவில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද

அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!