வகைப்படுத்தப்படாத

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

(UTV|ETHIOPIA) எத்தியோப்பியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்கு பின் வைத்தியசாலையில் படுக்கையிலேயே தனது பரீட்சையை எழுதியுள்ளார்.

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார்.

மேற்படி ரமழான் பெருநாள் காரணமாக அவரது உயர்தரப் பரீட்சைகள் தள்ளி வைக்கப்பட்டது.

திங்கட்கிழமையன்று அவருக்கு பரீட்சைகள் நடப்பதற்கு இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.

இந்நிலைியில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

හිටපු ආරක්ෂක ලේකම් අත්අඩංගුවට

බීමත් රියදුරන් 200 දෙනෙකු අත්අඩංගුවට

UN expert to visit SL to assess rights to freedom of peaceful assembly