உள்நாடு

குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தம்பதியினரிடமே குழந்தையை ஒப்படைக்கப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –    குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தம்பதியினரிடமே குழந்தையை ஒப்படைக்கப்பட்டுள்ளது

கோட்டை ரயில் நிலையத்தில் மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (17) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிணை கிடைத்ததும் இன்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழந்தையின் பெற்றோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை நன்னடத்தை உத்தியோகத்தர் விடுத்த கோரிக்கையை அடுத்து, குழந்தையின் போசாக்கு தேவையை கருத்தில் கொண்டு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பண்டாரவளை நன்னடத்தை அதிகாரியின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறும்
அத்துடன் சந்தேகத்திற்குரிய தம்பதியினரின் பெற்றோருக்கு குழந்தையின் போசாக்கு தேவைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலுகுமார் எம்.பி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர