உணர்ச்சி ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கார்ல்டன் இல்லத்திற்கு வந்த தருணத்திலிருந்து தம்மை சந்தித்து ஆசிர்வதித்து வரும் மகா சங்கத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
என் வாழ்க்கையின் பெரும்பகுதி மக்களுடனேயே கழிந்தது. இன்றும் அதேதான். ஒரு பதவிக்காலம் முடிவடையலாம், ஆனால் மக்களின் அன்பு பதவிக்காலத்தை விட மேலானதாகும்.
அது ஒருபோதும் முடிவதில்லை. ஆட்சியில் இருந்தபோதும், அதிகாரத்தில் இல்லாதபோதும் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றனர்.
கிராமத்தில் நட்பும் பிணைப்புகளும் எங்களுக்குப் பரிச்சயமானவை. சிறு குழந்தைகளின் உரையாடல் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
இந்த உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனெனில் சிறு குழந்தைகள் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசுவதில்லை. அதனால்தான் நான் அதை ரசிக்கிறேன்.
உணர்வு ரீதியாக நாட்டு மக்களுடன் பிணைப்பில்லாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக இருக்க முடியாது.
இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், மக்களின் தலைவராகவும், உங்கள் அண்டை வீட்டாராகவும், உங்கள் நெருங்கிய நண்பராகவும் இருப்பதில் நான் பெருமை கொள்கின்றேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.