உள்நாடுபிராந்தியம்

குளியாப்பிட்டியில் கோர விபத்து – மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரான டிப்பர் வாகனத்தின் சாரதியை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வண்டியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

editor

அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம் – 31 ஆம் திகதி விசாரணை

editor

பொல்கஹவெல – கொழும்பு கோட்டை வரையான தினசரி அலுவலக புகையிரத சேவை இடைநிறுத்தம்