தலவாக்கலை – லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற ஒருவர் சேற்றில் விழுந்து இன்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புசல்லாவையைச் சேர்ந்த இளைஞர் நாளை தலவாக்கலையில் ஆடைத்தொழிலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்வதற்காக இன்று நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மாலை நீராட குளத்துக்கு சென்ற வேளையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஐந்து இளைஞர்கள் சென்றிருந்த நிலையில் ஒருவர் குளத்தில் காணப்பட்ட இரும்பு தூணில் இருந்து குதித்த நிலையில் அவர் சேற்றுக்குள் சிக்கி இறந்துள்ளதாக சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.