பொலன்னறுவை, திம்புலாகல சொரிவில குளத்தின் வான் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்றினை மன்னம்பிட்டிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு இன்று (21) பிற்பகல் சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், குறித்த துப்பாக்கியினை கைப்பற்றியுள்ளனர்.
துருப்பிடித்திருந்த நிலையில் காணப்பட்ட இத்துப்பாக்கி கடந்த யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பாக பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியரத்னவின் ஆலோசனைப்படி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-ஏ.பிர்தெளஸ்
