வகைப்படுத்தப்படாத

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். – அமைச்சர் மனோ கணேசன்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள்-சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன.

எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் மனக்கிலேசம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனை வழிகோலியுள்ளது. எனவே குற்றம் இளைத்தவர்கள் உள்ளார்கள்.எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட இடந்தர முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையேயான பதட்டமாக இதை பார்க்கவும் அனுமதிக்க முடியாது. இவை தொடர்பில், உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளேன். இந்த துர்பாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை  முதல்நாளில் இருந்து கண்காணித்து வருகிறேன். பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் பெரெராஇ பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் சந்திரகுமார மற்றும் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற இருந்த அடையாள அணிவகுப்புஇ பாதிக்கப்பட்டோரின் மருத்துவ தேவைகள் காரணமாக எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணிவகுப்பு இடம்பெற்றதாகவும், எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறாகும். திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பை அடுத்து அடுத்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

Related posts

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Ginigathhena landslide Tragedy: Body of missing shop owner recovered

යල කන්නයේ වගා හානි වන්දි සඳහා රුපියල් මිලියන පන්සිය පනස් හයක්