சூடான செய்திகள் 1

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 3 துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாங்கொட – வதுகெதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காலி மற்றும் மொரந்துட்டுவ பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகளுடன் பல்வேறு வகையான 5 இரவைகளும், மோட்டார் வாகனம் ஒன்றும், உந்துருளியொன்றும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

21 வயதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பலாங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

எரிபொருள் விலை நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது