சூடான செய்திகள் 1

குற்றச்சாட்டை நிராகரிக்கும் அமைச்சர்

(UTV|COLOMBO)-அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக 500 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் வசந்த சேனாநாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கு ஏற்ப அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோதிலும், எதிர்பார்த்த சேவைகளை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றுவதற்கு தலைவர்கள் தவறியதாகவும் அமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று