உள்நாடு

குறுகிய நாட்களுக்குள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு!

இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இரகசிய வாக்குமூலம்

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

editor