உள்நாடுபிராந்தியம்

குருநாகல் வீதியில் சடலம் மீட்பு!

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். .

இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும் நீல நிற முழுக்கை சேட் மற்றும் காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசமைப்புக் குழு

ஒதுக்கப்பட்ட காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை!