உள்நாடுபிராந்தியம்

குருணாகலையில் கேபிள் கார் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த பிக்குகளில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த நேரத்தில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு (24) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் கடலில் பாய்ந்த இ.போ.ச பஸ்; நடத்துனர் காயம்

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்