குருணாகல், அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்டவர் கவிந்து நிமேஷ எனும் 28 வயதுடைய இளைஞர் ஆவார்.
இவர் வீரே, மெட்டியகனே, நாரம்மல எனும் முகவரியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
