அரசியல்உள்நாடு

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் அடுத்த வாரம் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்

மட்டக்களப்பு – குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை (11) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது, விசாரிப்பது மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளன.

நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவியிருந்த அசாதாரண சூழ்நிலையில், இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், படுகொலைகள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகளை கண்டறிந்து பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த வகையில், புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்கள் பற்றியும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில், புனித ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் காத்தான்குடி மற்றும் கல்முனை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பலர் அடங்குகின்றனர்.

இந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குருக்கள் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இது குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கமையவே இந்த புதைகுழியும் தோண்டப்படவுள்ளது.

Related posts

கற்பிட்டி, ஏத்தாலை பிரதேசத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

editor

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்