உள்நாடுபிராந்தியம்

குருக்கள்மடத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு – விசாரணைக்கு திகதி குறிப்பு

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை (09.10.2025) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் கடந்த 23.09.2025 கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த அகழ்வு தொடர்பான பாதீடு மற்றும் அதனுடைய விரிவாக்கம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சுக்கும் , நீதி அமைச்சுக்கும் அனுப்ப பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வழக்கமானது இன்று ( 09 ) குறித்த செயன்முறை தொடர்பான விடயங்களின் முன்னேற்றங்கள் ஆராய இன்று அழைக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

இலங்கையில் AI அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஆதரவு

editor

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor