சூடான செய்திகள் 1

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்குக் கொண்டு செல்லும் வீதிகளில் பாதுகாப்பிற்காக 100 இற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகள் பல தடவைகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமையினால் பலத்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, லொறிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நபர்களுக்கு பொது சொத்துக்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.