உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம்

(UTV|கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக டிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆரம்ப சட்ட வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இந்த மசோதா திருத்தப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, எனினும், இது முழுமையாக திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Related posts

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு

இலங்கை முதலீட்டு சபைக்கு கோப் குழுவினால் அழைப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினை தாக்கியமைக்கு அரசை கடுமையாகும் சாடும் பொன்சேகா