உள்நாடு

குடிவரவு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளருக்கு பிணை

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததாகச் சந்தேகிக்கப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நவம்பர் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

பிணை வழங்கப்பட்ட பின்னர், ஏனைய இரு சந்தேக நபர்களும் இந்த மாதம் 13 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Related posts

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர் தனது கடமையைப் பொறுப்பேற்றார்!

editor

சபாநாயகர் தலைமையில் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம்

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube