கிசு கிசு

கீதா, டயானாவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள்?

(UTV | கொழும்பு) –   இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் திலும் அமுனுகம போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். இவர் சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்படி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

Related posts

பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்?

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள்..

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்