அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்புடன் வினைத்திறன் மிக்க ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா

கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கல்வியாளர் திரு. எம். எல். எம். முபாறக் அவர்களின் நூல் “வினைத்திறன் மிக்க ஆசிரியர்” எனும் நூல், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் பங்கேற்புடன் மூதூர் ஸஹ்ரா விழா மண்டபத்தில் இன்று சிறப்பாக வெளியிடப்பட்டது.

இந்நூல் லத்தீப் அறக்கட்டளை அமைப்பினால் வெளியிடப்பட்டதாகும்.

நிகழ்வு சிறப்பான வரவேற்பு உரையுடன் தொடங்கியது. லத்தீப் அறக்கட்டளையின் உறுப்பினர் செல்வி ஆர். அனிகா வரவேற்புரையினை நிகழ்த்தி விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து, லத்தீப் அறக்கட்டளையின் செயலாளரும், கிழக்கு மாகாண சட்ட அலுவலருமான திரு. எம். எல். பைசார் தலைமையுரையினை ஆற்றி, நூலாசிரியரின் கல்வி பங்களிப்பு குறித்து பாராட்டுத் தெரிவித்தார்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர கலந்து கொண்டு “வினைத்திறன் மிக்க ஆசிரியர்” என்ற நூலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

மேலும், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் திரு. ராஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளரும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினருமான திரு. எம். பி. எம். ராபிக், அத்துடன் நூலாசிரியரின் துணைவி திருமதி நபீலா முபாறக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்விற்கு வண்ணம் சேர்த்தனர்.

“வினைத்திறன் மிக்க ஆசிரியர்” என்ற இந்நூல், ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறையில் எவ்வாறு கற்றல்–கற்பித்தல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும், மாணவர்களின் திறன்களை எவ்வாறு கண்டறிந்து வளர்க்க வேண்டும், மற்றும் நவீன கல்வி சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பன போன்ற பல பயனுள்ள கருத்துக்களை உள்ளடக்கியது.

நிகழ்வில் கல்வியிளாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

பங்காளி கட்சித் தலைவர்கள் – பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி