மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நிவாரண உதவித்திட்டம் வழங்கும் மனிதநேயப் பணிக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அந்தவகையில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மூலம் ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் 01.12.2025 வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், உதவி முதல்வர் வை.தினேஸ்குமார், உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர் திரு.தனஞ்செயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
