வகைப்படுத்தப்படாத

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று பிரதமரை சந்தித்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Rami Malek: Bond terrorist ‘not driven by religion’