உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பாதுகாப்பான முறையில் குண்டுகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

தே.அ.அட்டை விநியோகம் தொடர்பில் குறுந்தகவல் சேவை

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

வரவு செலவுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று