வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்

(UTV|KILINOCHCHI)-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை  குழுவே இன்று  தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி , பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைளுக்கும்  மேற்படி குழு சுயேட்சை போட்டியிடுகின்றது.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்
மக்கள் ஒரு வினைத்திறன் மிக்க பிரதேச சபையை ஏற்படுத்த விரும்புகின்றனர். கடந்த காலங்கள் போன்று  பிரதேச சபைகளின் செயற்பாடுகள் இருக்க கூடாது என மக்கள் விரும்புகின்றனர்  எனவே தான் அவர்கள்  இந்த முறை தங்களின் வட்டாரங்களிலிருந்து சிறந்த மக்கள் பணியாற்றக் கூடிய பிரதிநிதிகளை எமக்கு தெரிவு செய்து வழங்கியுள்ளனா். எனவே நாம் பிரதேச  சபைகளின்  அதிகாரத்திற்கு வருகின்ற போது மக்களின் விருப்பத்திற்கு அமைவாக வினைதிறன் உள்ள சபையாக மாற்றி செயற்படுத்தி காட்வோம் எனத் தெரிவித்த அவர் கடந்தகாலத்தில் மாவட்டத்தில் எங்களுடைய செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக இருந்ததன் காரணமாகவே  மக்கள் மத்தியில் எமக்கான  ஆதரவு தளமும் அதிகம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
எஸ்.என்.நிபோஜன்
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/IMG_5174.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/DSC00155.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/DSC00157.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/IMG_5182.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் தூற்றிய சம்பவம்! -ஜோன் அமரதுங்கவிற்கு கண்டனம்!

IAEA chief Yukiya Amano dies at 72

கால நிலை