வகைப்படுத்தப்படாத

கிரீஸ் நாட்டில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|GREECE)-கிரீஸ் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஏதென்சில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கெண்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் ஏதென்சிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
எனினும் நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மராத்தான் நகரின் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், மேலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நுவரெலியா மாவட்ட தபாலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்

Australian swimmer refuses to join rival on podium