கிறீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரியை (Tariff) விதிக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் குறித்த வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா கிறீன்லாந்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு எதிராகப் பிரித்தானியா உள்ளிட்ட 7 ஐரோப்பிய நாடுகள் இதுவரை எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், கிறீன்லாந்தின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களும் டேனிஷ் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிறீன்லாந்தின் இறைமை மீது அமெரிக்க ஜனாதிபதியால் செல்வாக்குச் செலுத்த முடியாது என டென்மார்க் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
