உள்நாடுபிராந்தியம்

கிரியெல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வு – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன பங்கேற்பு

கிரியெல்ல மத்திய மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்றையதினம் (24) சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

140 வருட வரலாற்றைக் கொண்ட கிரியல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் தற்போது சுமார் 1600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர், சுமார் 87 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேற்படி பாடசாலையில் 591 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிரியெல்ல பிரதேச செயலாளர் குமாரி கம அத்திகே, குருவிட்ட கோட்ட கல்வி பணிப்பாளர் வத்சலா பண்டார, கிரியல்ல மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆர்.எம்.டபிள்யூ ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு

மீண்டும் பானுக இலங்கை அணியில்

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்