விளையாட்டு

கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்

(UTV|INDIA)-சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பெயரிடப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளமையை அடுத்து, அந்தப் பதவிக்கு ஷஷாங்க் மனோகர் பெயரிடப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் பின்னர், டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

இதனிடையே, ஷஷாங்க் மனோகர் அடுத்த மாதம் முதல் தம்முடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

T20 WorldCup : சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்

சவால்களுக்கு மத்தியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பாராட்டு

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது