சூடான செய்திகள் 1விளையாட்டு

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

(UTV|COLOMBO) நாளை நடைபெற உள்ள இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் மற்றும் உதவி செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடையில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாம் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோர் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் இதனை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் காட்டிய டில்ஷான்

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு