உள்நாடுவகைப்படுத்தப்படாத

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநகர சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 3000 ரூபாவாகவும் உள்ளூராட்சி சபைகளின் எல்லைக்குள் மாதாந்த அலுவலக கொடுப்பனவு 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த எழுதுபொருள் கொடுப்பனவும் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கைப்பற்றப்பட்ட 900 கிலோ கொக்கேயனை அழிக்க பொலிஸார் நடவடிக்கை

வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடை!

பூஜா பூமி என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் – ஸ்ரீ பிரசாத்.