உள்நாடு

கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று (02) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார வேலியை உடைத்து, கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகளை மின்சார வேலிக்கு அப்பால் நகர்த்தி, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டு யானைகளின் உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இது திட்டமிடப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உட்பட சுமார் 2,000 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் மூதூரில் கைது

editor

திங்கள் முதல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

சிக்கலான சவாலை எதிர்கொள்ள போகும் வட மாகாண சுகாதாரத்துறை!