கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நேற்று (07) இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 32 வயதான, கொழும்பு 15 ஐ சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.