விளையாட்டு

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மாலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார்.

உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார்.

20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும்.

ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக கிரஹம் ஃபோர்ட் கூறியுள்ளார்.

Related posts

குமார் சங்ககாரவிற்கு கிடைத்த வாய்ப்பு…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

யுவராஜ் சிங் ஓய்வு முடிவை மீளப் பெறுகிறார்