வகைப்படுத்தப்படாத

கித்துல்கல வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி ஏறிச்செல்ல முற்பட்ட லொறி சுற்றிவளைப்பு

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்ட விரோதமாக மரங்கைளை வெட்டி லொறியில் ஏற்றிச்செல்ல முற்பட்ட இருவரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர்

கித்துல்கல மீகத்தென்ன வனப்பகுதியிலே 10.06.2017 இரவு மரக்குற்றியுடன் புறப்பட தயாராகவிருந்த லொறியை சுற்றிவளைத்தனர்

கினிகத்தேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மரக்குறியுடனான லொறியையும் 11.06.2017 ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மரக்குறியின்

பெருமதி தொடர்பில் வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிக்கையை கோரியுள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

US brings in new fast-track deportation rule

மீன்பிடித் துறைமுகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

ஹட்டன் டிப்போவின் 10 புதிய பஸ் வண்டிகள் சேவை ஆரம்ப நிகழ்வு