வகைப்படுத்தப்படாத

கிண்ணியாவில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கிண்ணியா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா-3 அண்ணல் நகர் பிரதேசத்தில் கஞ்சா கலந்த மதனமோதக லேகியத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது விற்பனைக்காக எடுத்துசெல்லப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை பிராந்திய விஷதன்மை போதைப்பொருள் ஒழிப்பு ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது 4 லட்சத்து 68 ஆயிரத்து 750 ரூபாய் பெறுமதியான மதனமோதக லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனை விற்பனைக்காக எடுத்துச் சென்ற 54 வயதுடைய நபரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரையும், அவர் வசம் இருந்த மதன மோதகங்களையும் விஷதன்மை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சம்மந்தப்பட்டவரையும் பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

செய்தியாளர் A.M. கீத் திருகோணமலை

 

Related posts

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணரும் ஜப்பான் பட்டத்து இளவரசி

அலரிமாளிகையில் சசுநோதய

Update: இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு