யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
குறித்த பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்டபோது கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-கஜிந்தன்