உள்நாடுபிராந்தியம்

கிட்டங்கியில் சல்பீனியாக்களை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் சல்பீனியாக்கள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளின் பேரில் இதனை உடனடியாக சீர் செய்யுமாறு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் விடுத்த அவசர பணிப்புரைக்கு அமைவாக இன்று சல்பீனியாக்களை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்பாதை ஊடான போக்குவரத்துகள் சுமுகமாக இடம்பெற்று வருகிறது.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

முன்னாள் எம்.பி சூரியப்பெரும காலமானர்

editor

இன்று முதல் உணவுப் பொதிகளின் விலை, பாண் விலை அதிகரிப்பு

ஜனாதிபதி அநுர இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

editor