காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது நடத்தியுள்ள தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயம் அடைந்துள்ளனர்.
காஸாவில் உள்ள ஒரேயொரு தேவாலயமான பேமிலி கத்தோலிக்க தேவாலயத்தில் போரினால் வீடுகளை இழந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்த தேவாலயத்தின் வளாகத்தில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவாலயத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிந்திருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், “மதத் தலங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அவற்றுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் வருந்துவதாகவும்” தெரிவித்துள்ளது.