உலகம்

காஷ்மீர் மீதான தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார்- தளபதி நரவானே

(UTVNEWS | INDIA) -பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்திய தேசிய இராணுவத்தின் தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய இராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் தற்போது முப்படைகளின் தளபதியாக பொறுப்பளிக்க பட்டுள்ளதை தொடர்ந்து இந்திய இராணுவத்தின் தளபதியாக எம்.எம். நரவானே பொறுபேறுள்ளார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் எங்களிடம் பல உள்ளது. அரசு கேட்டுக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தளபதியாக பொறுப்பேற்றவுடன் அவர் அளித்திருந்த முதல் பேட்டியிலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

Related posts

தாய்லாந்திலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறைத்தண்டனை

editor