வகைப்படுத்தப்படாத

காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீச்சு

(UTV|INDIA) புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை இன்று(26) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் குண்டு வீசி அழித்துள்ளது.

இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் குறித்த இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்காக சுமார் 1000Kg எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் இந்திய விமானப்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed

பல்கலைக்கழக அனுமதிக்குரிய Z வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியீடு

உபதலைவர் பதவியில் இருந்த ரவி விலக வேண்டும் – மாரப்பன குழு