சூடான செய்திகள் 1

காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைபொருள் வர்த்தகர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) மாரவில நகரில் போதைப்பொருள் வர்த்தக ஒருவர் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த போதைபொருள் வர்த்தகர் உயிரிழந்தார்.

குறித்த சந்தேகநபரை காவற்துறையினர் கைது செய்ய சென்ற போது அவர், காவற்துறையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

உயிரிழந்தவர் 31 வயதுடைய, சிலாபம் – முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்தவர்.

இந்த தாக்குதலில் காவற்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இன்று அரச விடுமுறை

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]