உள்நாடுபிராந்தியம்

கிணற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு – காவத்தமுனையில் சம்பவம்

இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் இன்று (9) புதன்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கண்டி அரசர்களின் அரண்மனை தொல்பொருள் நூதனசாலை மீள திறப்பு

editor

சஜித்தை வெல்ல வைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் நற்பிட்டிமுனையில் கூட்டம்.

editor

கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் நேரங்களில் மாற்றம்