உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற 26 வயது காதலி பலியான சோகம்

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) மாலை 5 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

கால்வாயின் பலத்த நீரோட்டம் காரணமாக, கால்வாயின் குறுகிய வரம்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இளைஞன் வழுக்கி கால்வாயில் விழுந்துள்ளார்.

இதன்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற காதலியும் கால்வாயில் விழுந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த மஹியங்கனை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் உடனடியாக குதித்து இளைஞனைக் காப்பாற்றினர்.

இருப்பினும், இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி பொலிஸாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்படி, இன்று (21) காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

மாடிவீடு குடியிருப்பு பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

சீனாவுக்கான விமான சேவைகளில் மாற்றம்