உள்நாடு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு 9வது நாள்

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டத்தில் நேற்றைய தினம் கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம், ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில், தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர், 12 பேர் மீட்பு – ஒருவரை காணவில்லை

editor

MV Xpress pearl : உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு

நாட்டில் தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

editor