வகைப்படுத்தப்படாத

காலி மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UDHAYAM, COLOMBO) – காலி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலையினால் காலி மாவட்டத்திலுள்ள 396 கிராம சேவகர் பிரிவிலுள்ள 38,155 குடும்பங்களைச் சேர்ந்த 151,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தத்தினால் காலி மாவட்டத்தில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை வெள்ளப்பெருக்கினால் 161 வீடுகள் முழுமையாகவும், 467 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தற்போது பத்தேகமை, நாகொட ஆகிய பிரதேசங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. ஜின் கங்கையின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்காக 13 நிவாரண சேவை நிலையங்கள் காலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் மூலம் நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எல்.ஜீ. திலகரத்ன

பிரிவுத்தலைவர் – பிரச்சாரப் பிரிவு

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயககத்துக்குப் பதிலாக

Related posts

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 03 நாட்கள் துக்க தினம்..

Navy Commander given service extension

கம்போடியா கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு