உள்நாடு

காலியில் கடும் மழை – நீரில் மூழ்கியுள்ள வீதிகள்

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி – வக்வெல்ல வீதியூடான போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு

editor