வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் கிழக்கு ஊவா மற்றம் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரை பகுதிகளின் சில இடங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு சப்ரகமுவ ,மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் .

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அதன் வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Flour price hike irks Bakery Owners

Supreme Court serves charge sheet on Ranjan

மாணவி உயிரோடு எரித்து படுகொலை…