இந்த நாட்டில் ஹம்பாந்தோட்டை, புத்தளம், ஆணையிரவு போன்ற பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது புத்தளத்தில் அளவுக்கு அதிகமான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நானும் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற வகையில்
இங்கு நாம் சிறுவயதில் இருந்து பார்த்து வருவது, இங்கு உப்பு மலை போல் குவிக்கப்பட்டு காணப்படும்.
புத்தளத்திலும் அண்டிய கிராமங்களிலும் அதிகமான உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.
எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவிப்பது போல் உப்பு இயந்திரங்களால் செய்யப்படுவது அல்ல அது நீர் காற்று வெப்பத்தினால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாம் உப்பை எடுக்கும் காலத்தில் மழை பெய்யுமானால் உப்பு உற்பத்தி குறைவடையும்.
உப்பு உற்பத்தி தொழில் துறையில் உள்ள எமது நண்பர்கள் கூட மழை காலத்தில் இதில் உள்ள பாதிப்புகளை என்னிடம் சொல்லி உள்ளார்கள்.
சென்ற வாரம் இது தொடர்பில் புத்தளத்திற்கு வந்த அமைச்சர் குறைபாடுகளை கண்டறிந்து இது தொடர்பான ஆளணிகளை தருவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளதாக தெரிவித்தார்.
உப்பு உற்பத்தி செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.
உப்பு உற்பத்திக்கு குறைபாட்டுக்கு காலநிலை தான் காரணம். நாம் அல்ல. உப்பு உற்பத்திக்கும் எமது தேசிய மக்கள் சக்திக்கும் சம்பந்தம் இல்லை.
காலநிலை காரணமாகத்தான் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இருந்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி உப்பு தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என இறக்குமதி செய்து உப்பு விநியோகத்தை செய்து வருகிறது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J. M. பைசல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்